பீன்ஸ் இன் டொமேட்டோ சாஸ்
தேவையான பொருட்கள்:
1. பீன்ஸ் - 1/4 கிலோ
2. வற்றல் மிளகாய் - 2
3. பூண்டு - 3 பல்
4. தக்காளி - 3
5. வெங்காயம் - 1
6. உப்பு
7. எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் ஒன்றிரண்டாக பொடித்த வற்றல் மிளகாய் (சில்லி ஃப்லேக்ஸ்) சேர்த்து வதக்கவும்.
தக்காளியை மிக்ஸியில் போட்டு அடித்து அதை இத்துடன் சேர்க்கவும்.
தக்காளி சற்று வதங்கி பச்சை வாசம் அடங்கியதும் பீன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து கலந்து மூடி வேக விடவும்.
இடை இடையே பிரட்டி விடவும். பீன்ஸ் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
குறிப்புகள்:
பீன்ஸ் தக்காளி சாஸுடன் நன்றாக கலந்து இருக்க வேண்டும். பீன்ஸ் சிறிதாக இருப்பின் நறுக்க தேவை இல்லை. இதில் சாதாரண பீன்ஸை விட french beans எனப்படும் சாலட்டுக்கு பயன்படுத்தும் உருட்டு வகை பீன்ஸ் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். நீர் சேர்க்க தேவை இல்லை, தக்காளி சாறிலேயே வெந்தால் தான் சுவை நன்றாக இருக்கும்.