பீட்ரூட் வறை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 200 கிராம்

வெங்காயம் - ஒன்று

முட்டை - 2

மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கடுகு - ஒரு தேக்கரண்டி

பெருஞ்சீரகம் (சோம்பு) - ஒரு தேக்கரண்டி

தேசிக்காய்சாறு (லெமன் ஜூஸ்) - தேவையான அளவு

செய்முறை:

பீட்ரூட் தோல்சீவி கழுவி துருவவும். வாணலியில் எண்ணெயை கொதிக்க விடவும். கொதித்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.

பெருஞ்சீரகம்(சோம்பு, வெங்காயம் போட்டு தாளிக்கவும். அதில் துருவிய பீட்ரூட்டினை போட்டு அவிய விடவும்.

ஒரளவு அவிந்ததும் மிளகாய் தூள் போடவும். பின்பு முட்டையை போட்டு வறை போல பிரட்டவும்.

வறைபோல வந்ததும் தேசிக்காய்சாறு (லெமன் ஜுஸ்) சேர்த்து இறக்கவும்.

இதோ பீட்ரூட் வறை தயாராகி விட்டது.

குறிப்புகள்:

பீட்ரூட் அதிகமாக சாப்பிட்டால் நமக்கு தேவையானளவு இரத்தம் கிடைக்கும்.

பீட்ரூட் தோல்சீவி கழுவி பூ போல துருவவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனையின் பின்பு செய்து சாப்பிடவும்.