பீட்ரூட் துவையல்
0
தேவையான பொருட்கள்:
துருவிய பீட்ரூட் - கால் கிலோ
இஞ்சி - ஒரு துண்டு
பச்சைமிளகாய் - 4
தேங்காய்ப்பூ - கால் கப்(நறுக்கிய)
கறிவேப்பிலை - சிறிதளவு
தேசிக்காய்சாறு (லெமன் ஜுஸ்) - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் (சோம்பு) - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - அரைப்பாகம்
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
எண்ணெயைச் சூடாக்கி கடுகு, சீரகம், வெங்காயம் தாளிக்கவும். துருவிய பீட்ரூட், இஞ்சி, பச்சைமிளகாய், தேங்காய்ப்பூ உப்பு எல்லாவற்றையும் பச்சையாக நன்றாக அரைக்கவும்.
பின்பு அதனுடன் தாளித்தவற்றையும் கலந்து தேசிக்காய்சாறு (லெமன் ஜுஸ்) கலந்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இரத்தோட்டத்திற்கு சிறந்த துவையல். நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.