பீட்ரூட் டம்பிள்ங்ஸ்
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2
துவரம்பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
வரமிளகாய் - 3
வெங்காயம் - ஒன்று (பொடியாக அரிந்தது)
சீரகம் - 1/4 தேக்கரண்டி
பூண்டு - ஒரு பல் (விரும்பினால்)
எண்ணெய் - பொரிப்பதற்கு 1/2 கப்
செய்முறை:
பீட்ரூட்டை தோல் சீவி நன்றாக துருவி வைத்துக் கொள்ளவும்.
பருப்புகளை ஒன்றாக ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்னெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து விட்டு பூண்டை போடவும். பின் வெங்காயம் போட்டு வதக்கின பிறகு இந்த பருப்பு கலவை போட்டு உப்பு போட்டு பத்து நிமிடம் வதக்கவும்.
கடைசியாக பீட்ரூட் துருவல் போட்டு பிரட்டி எடுக்கவும். நல்ல ஆறின பின் இந்த கலவையை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொதிக்கும் வற்றல் குழம்பிலும் போடலாம் அல்லது புளிகுழம்பிலும்/சூப்பிலும் போடலாம்.
சூடான எண்ணெயிலும் போட்டு பொரித்தும் போடலாம். இதை குழம்பில் போட்டு சூடான சாதத்துடன் சாப்பிடலாம்.
இதை வெறும் ஸ்நாக்காக கூட சாப்பிடலாம்.
குறிப்புகள்:
இது ஸ்வீட் இருக்கிற காய் ஆனால் இப்படி செய்தால் ஸ்வீட்டே தெரியாது. இது உடம்பிற்கு ரொம்ப நல்லது.
இந்த பருப்பு கலவை+பீட்ரூட் கொஞ்சம் உதிரியாக இருக்க வேண்டும். உதிராக இருந்தால் உருண்டை பிடிக்க நன்றாக வரும்.