பீட்ரூட் சிப்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கெட்டியான பெரிய பீட்ரூட் - 3

கடலைமா அல்லது அரிசி மா - ஒரு மேசைக்கரண்டி

எள் - ஒரு மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - விரும்பிய சுவைக்கேற்ப

தயிர் - ஒரு தேக்கரண்டி

தண்ணீர் - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பீட்ரூட்டை விரும்பிய வடிவில் மெல்லிய துண்டுகளாக (சிப்ஸ்க்கு ஏற்றதாக) வெட்டி கொள்ளவும்.

அதன்பின்பு கடலைமா அல்லது அரிசிமா, எள், உப்பு, மிளகாய்த்தூள், தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து உதிரி உதிரியாக பிசறிக்கொள்ளவும்.

அதன் பின்பு மா பீட்ரூட் துண்டுகளில் படிந்ததும் எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்புகள்:

இது குழந்தைகளை மயக்கும் இரும்பு (அயர்ன்) சத்து நிறைந்த அட்டகாசமான சிப்ஸ். எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - பீட்ரூட்டை விரும்பிய வடிவில் மெல்லிய துண்டுகளாக (சிப்ஸ்க்கு ஏற்றதாக) வெட்டிகொள்ளவும்.