பீட்ரூட் கறி
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த பீட்ரூட் - 450 கிராம் வெங்காயம் - 15 கிராம் பச்சை மிளகாய் - 2 பூண்டு - 3 பற்கள் கறித்தூள் - ஒரு மேசைக்கரண்டி கரம் மசாலா - அரை தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 3 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள் எலுமிச்சம்புளி - 1 1/2 தேக்கரண்டி
செய்முறை:
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பீட்ரூட்
வெங்காயம் இரண்டையும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். பூண்டை தட்டி நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு
வெங்காயம்
பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதில் நறுக்கி வைத்திருக்கும் பீட்ரூட்டை சேர்த்து பிரட்டி விடவும்.
பீட்ரூட்டிற்கு மேலே நிற்கக்கூடிய அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மிதமான தீயில் வைத்து நீண்ட நேரம் வேக விடவும்.
பாதியளவு நீர் வற்றி அவிந்து வந்ததும்
கறித்தூளை சேர்த்து
மீண்டும் மூடி வைத்து வேக விடவும்.
பீட்ரூட் ஓரளவிற்கு வெந்து பிரட்டலானதும் கறிவேப்பிலை
கரம்மசாலா தூள் சேர்த்து பிரட்டி விடவும்.
நன்கு வெந்ததும் இறக்கி வைத்து மேலே எலுமிச்சம்புளி சேர்த்து பிரட்டவும்.
சுவையான ஸ்பைஸி பீட்ரூட் கறி தயார். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்