பீட்ரூட் இலை வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் இலை(சிறிதாகவெட்டியது) - ஒரு கட்டு

உப்பு - தேவையானளவு

பெரிய வெங்காயம் (சிறிதாகவெட்டியது) - ஒன்று

தேசிக்காய்ச்சாறு (லைம்(லெமன்)ஜூஸ்) - ஒரு தேக்கரண்டி

பச்சைமிளகாய் - தேவையான அளவு (சிறிதாகவெட்டியது)

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - தேவையான அளவு

தேங்காய்ப்பூ - தேவையான அளவு

மிளகாய்த்தூள் -அரை தேக்கரண்டி

செய்முறை:

சிறிதாக வெட்டிய பீட்ரூட் இலைகளை கழுவி வைக்கவும். அடுப்பில் தாட்சியை வைத்து அது சூடாகியதும் தாட்சியில்(வாணலியில்)எண்ணெய் விட்டு அது கொதித்ததும் கடுகு, சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அதில் சிறிதாகவெட்டிய பீட்ரூட் இலைகளை போட்டு தாளிக்கவும்.

அது ஒரளவு தாளித்த பின்பு மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்ப்பூ ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.

பின்பு தேசிக்காய்ச்சாறு(லெமன்)ஜூஸ்) சேர்த்து கலக்க வேண்டும்.

எல்லாம் கலந்த பின்பு 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து பின்பு இறக்கி பறிமாறவும்

குறிப்புகள்:

பீட்ரூட் இலை வறுவல் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், இரும்பு, உயிர்சத்து A,B1,B2,B3,B5,B6,B9,C, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீஸியம், சோடியம், கால்சியம் ஆகியவை நிறைந்த ஒர் உணவுப்பொருள். இதை சர்க்கரை நோய் உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ண வேண்டும்.