பீட்ருட் சம்பல்
தேவையான பொருட்கள்:
பீட்ருட் - 200 கிராம்
வெங்காயம் (பெரிய) - ஒன்று
பச்சை மிளகாய் - 3
மிளகு(தூள்) - தேவையானளவு
உப்பு- தேவையானளவு
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி
பால் அல்லது யோக்கற் - தேவையான அளவு
தேசிக்காய் சாறு (லெமன் ஜுஸ்) - தேவையான அளவு
செய்முறை:
பீட்ருட்டினை கழுவித் துருவவும். பச்சைமிளகாயை சிறிய துண்டுகளாக வெட்டவும். வெங்காயத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கவும்.
இவையாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் உப்பு, மிளகு(தூள்), பால் அல்லது யோக்கற், அஜினோமோட்டோ, தேசிக்காய்சாறு (லெமென் ஜுஸ்) போட்டு கலக்கவும் .
கலக்கிய கலவையை 5 நிமிடங்கள் ஊறவிடவும். இதோ சுவையான சத்தான பீட்ருட் சம்பல் தயார்.
குறிப்புகள்:
பீட்ருட் பொதுவாக எல்லோருக்கும் மிக நல்லது ஆனால் சிலருக்கு (சில நோயுடையோர்) இது கூடாது. அதனால் அதைப்பற்றியறிந்து உண்ணவும் இது இரத்த சுத்திகரிப்புக்கும் இரத்த விருத்திக்கும், வம்ச விருத்திக்கும் சிறந்தது. சிலருக்கு (சில நோயுடையோர்) இது கூடாது அதனால் அதைப்பற்றியறிந்து உண்ணவும். விரும்பியவர்கள் தக்காளிப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கலாம், ஊறுகாயையும் (சிறிய துண்டு) அல்லது அஜினோமோட்டோவையும் அல்லது 1- 3ஜயும் சேர்க்கலாம்.