பீசா சாஸ்
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - ஒன்று (பெரியது) தக்காளி - 3 (பெரியது) பூண்டு - 5 பல் மிளகு - கால் தேக்கரண்டி சர்க்கரை - அரை தேக்கரண்டி ட்ரை ஆரிகனோ - அரை தேக்கரண்டி ட்ரை பேசில் - அரை தேக்கரண்டி உப்பு - சுவைக்கு சில்லி ஃப்ளேக்ஸ் - கால் தேக்கரண்டி டொமேட்டோ சாஸ் / கெட்சப் - 3 மேசைக்கரண்டி ஆலிவ் ஆயில் - 3 தேக்கரண்டி
செய்முறை:
பூண்டு
வெங்காயம்
தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். எண்ணெயை சூடாக்கி பூண்டை சேர்த்து வதக்கவும்.
பூண்டுடன் பேசில் மற்றும் ஆரிகனோ சேர்த்து வதக்கி
பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் வெங்காயத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் தீயை சற்று அதிகமாக வைத்து நறுக்கிய தக்காளி சேர்த்து
தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி சற்று குழைய துவங்கியதும் தீயை முற்றிலும் குறைத்து வைத்து மூடி போடாமல் அரை மணி நேரம் வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைந்து வெந்ததும் சில்லி ஃப்ளேக்ஸ்
சர்க்கரை
தக்காளி சாஸ்
ஃப்ரெஷாக பொடித்த மிளகு தூள் சேர்த்து கலக்கவும். சிறு தீயில் மீண்டும் 10 நிமிடம் வரை வைத்திருந்து திக்கான சாஸ் பதம் வந்ததும் எடுக்கவும்.
சுவையான பீசா சாஸ் தயார். பீசா பேசுக்கு மேல் சாஸ் தடவி
மேலே சீஸ் தூவி
விரும்பிய டாப்பிங் பயன்படுத்துங்கள்.