பீஃப் காஸரோல்
தேவையான பொருட்கள்:
இறைச்சி - அரை கிலோ காளான் (பட்டன் மஷ்ரூம்) - 8 குடைமிளகாய் - ஒன்று காரட் - ஒன்று (பெரியது) பெரிய வெங்காயம் - பாதி பூண்டு - 2 பல் பே இலைகள் (bay leaves) - 2 அல்லது 3 ரோஸ்மெரி - 2 நெட்டு ஸுகினி - ஒன்று (பெரியது) ரெட் வைன் - 1 1/2 கோப்பை ஸ்டாக் - 2 Maggi சூப் கட்டிகளை 1 கோப்பை வெந்நீரில் கரைத்து எடுக்கவும் எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெய் - சிறிது மா - அரை கோப்பை
செய்முறை:
மேற் சொன்ன தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைத்து ஆயத்தப்படுத்திக் கொள்ளவும்.
ஸுகினியை வில்லைகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
இறைச்சியைச் சுத்தம் செய்து ஒரு அங்குலத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
காளான்களை இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும். குடைமிளகாயை விதைகளை அகற்றி விட்டு மீதியை நறுக்கி வைக்கவும். காரட்டையும் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.
ஒரு ட்ரேயில் மாவைக் கொட்டி அதில் இறைச்சித் துண்டுகளை போட்டு தாராளமாக மாவில் புரட்டி வைக்கவும்.
பானில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம்
பூண்டு தாளித்துக் கொள்ளவும். பொரிந்து நிறம் மாற ஆரம்பித்ததும் அதை ஒரு காஸரோல் சமைக்கும் பாத்திரத்திற்கு மாற்றவும். (இதே நேரம் அவனை 160°c யில் முற்சூடு செய்வதற்காகப் போட்டு விடவும்.)
அதே பாத்திரத்தில் இறைச்சித் துண்டுகளை ஒன்றோடு ஒன்று முட்டாமல் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். பொரிக்கும் முன் மீண்டும் ஒரு முறை மாவில் பிரட்டிக் கொள்ளவும். தேவையெனில் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். துண்டுகளை எல்லாப் பக்கமும் திருப்பிப் போட்டு
மாவு நிறம் மாற ஆரம்பித்ததும் வெங்காயம் பூண்டோடு சேர்க்கவும். வெளிப்புறம் மட்டும் வெந்து இருந்தால் போதும். மாமிசம் வேக வேண்டியது இல்லை.
இனி காரட்
குடைமிளகாய்
ஒரு கோப்பை வைன்
அத்தோடு ஸ்டாக் முழுவதும் சேர்த்து மிதமான தீயில் வைத்து சமைக்கவும்.
காய்கறிகள் சுருங்க ஆரம்பிக்கச் சற்று முன்னால் காளான் துண்டுகள்
பே இலைகள்
ரோஸ்மெரி
மீதி வைன் சேர்த்து ஓரிரு நிமிடம் விடவும்.
காய்கள் சுருண்டு வருகையில் அனைத்தையும் காஸரோல் பாத்திரத்தில் கொட்டவும்.
இவற்றோடு வில்லைகளாக்கி வைத்திருக்கும் ஸுகினியைச் சேர்க்கவும். (விரும்பினால் மீதிக் காய்கறிகள் இறக்கும் முன்பாக கடைசியாக இவற்றையும் சேர்த்து 2
3 நிமிடங்கள் வேக வைக்கலாம்.)
பாத்திரத்தை அதற்குரிய மூடியால் மூடி
முற்சூடு பண்ணிய அவனில் (160°c) 1 1/2 மணி நேரம் வேக விட்டு இறக்கவும். இதனை மாஷ்ட் பொடேடோஸ்
பேக்ட் பொடேடோஸ் அல்லது சோற்றுடன் கூடச் சாப்பிடலாம். பரிமாறும் வேளையில் தேவைக்கு உப்பு
மிளகுதூள் தூவிக் கொள்ளவும்.