பிஸ்ஸா மாவு
தேவையான பொருட்கள்:
ஆல் பர்பஸ் மாவு (மைதா மாவு) - 3 கப்
ட்ரை ஈஸ்ட் - 2 1/4 தேக்கரண்டி
தண்ணீர் - 1 கப்
சீனி - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
மிதமான சூடு தன்ணீரில் ஈஸ்ட், சீனி சேர்த்து கலந்து 10 நிமிடம் வைக்கவும்,
மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். கலந்த மாவில் ஈஸ்ட் கலவையை சேர்த்து நன்றாக பிசையவும்.
ஒரு நல்ல வெட் க்ளாத் அல்லது டிஸ்ஷுவினால் மூடி காற்று புகாத கண்டெய்னரில் போட்டு 3 மணி நேரம் வார்ம் இடத்தில் வைக்கவும்.
3 மணி நேரம் கழிந்து அந்த மாவின் அளவு இன்னும் பெரிதாக இருக்கும்.
அதை எடுத்து ரோலிங்க் பின் வைத்து நல்ல வேண்டிய சைஸில்(திக் அல்லது தின்) நல்ல பரத்திவிட்டு அதை பிஸ்ஸா ஸ்டோன் அல்லது பானில் வைக்கவும்.
இந்த மாவை காற்று புகாத கண்டெய்னர் அல்லது சிப்லாக் கவரில் போட்டு ப்ரிஸரில் வைக்கலாம்.
குறிப்புகள்:
இது இத்தாலியன் முறை ஹோம்மெய்ட் பிஸ்ஸா டவ் செய்வது எளிது.
இதை ப்ரீஸரில் வைப்பதாக இருந்தால் மாவு கலவை நன்றாக பெரிய சைஸாக வந்த பின் தான் அதை எடுத்து வைக்கவும்.