பிஸ்கீமியா (Biskeemiya)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - ஒரு கப் உப்பு பேக்டு பீன்ஸ் இன் டொமேட்டோ சாஸ் - 4 மேசைக்கரண்டி (Can) வெங்காயம் - பாதி பச்சை மிளகாய் - ஒன்று பூண்டு - 2 பல் கறிவேப்பிலை மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி கரம் மசாலா - சிறிது எண்ணெய் - தேவைக்கு Smoked Tuna - சிறிது (விரும்பினால்) வேக வைத்த முட்டை - ஒன்று (விரும்பினால்)

செய்முறை:

மைதா மாவில் உப்பு சேர்த்து சிறிது எண்ணெய்

தேவையான நீர் விட்டு சமோசாக்கு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம்

பச்சை மிளகாய்

பூண்டு

கறிவேப்பிலை கலந்து வதக்கவும்.

இதில் பேக்டு பீன்ஸ் சேர்த்து பிரட்டி விடவும். (மீன் அல்லது பொடியாக நறுக்கிய முட்டை சேர்க்க விரும்பினாலும் இப்போதே சேர்க்கலாம்)

பின் மிளகாய் தூள்

கரம் மசாலா

உப்பு சேர்த்து வதக்கி கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து எடுக்கவும்.

மைதா மாவை வட்டமாக திரட்டி கொள்ளவும்.

அதன் நடுவே பீன்ஸ் கலவையை ஒரு தேக்கரண்டி அளவு வைக்கவும்.

இரண்டு பக்கம் மூடி ஒரு தேக்கரண்டி மைதா மாவை நீரில் கரைத்து பேஸ்ட் செய்து அதை கொண்டு ஒட்டவும்.

இதே போல் மற்ற இரண்டு பக்கமும் சேர்த்து மைதா பேஸ்ட் கொண்டு மூடி விடவும்.

இது போல் எல்லாவற்றையும் தயார் செய்து வைத்து கொண்டு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்.

சுலபமான சுவையான பிஸ்கீமியா தயார். இதிலும் இந்த ஊர் குட்டி மிருஸ் தான் பயன்படுத்திருக்கிறோம்.

இந்த குறிப்பு மாலத்தீவு சமையலில் பல வருட அனுபவம் உள்ள திருமதி. சித்ரா அவர்கள் செய்து காட்டியது.

குறிப்புகள்: