பிஸ்கட் புட்டிங்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மேரி பிஸ்கட் - 15

பால் - 1/2 லி

சீனி - 1/4 படி

முட்டை - 5

செய்முறை:

முதலில் பாலில் மேரி பிஸ்கட்டை 15 நிமிடம் ஊற வைக்கவும்.

முட்டையையும்,சீனியையும் கலக்கவும்.

ஊற வைத்த பிஸ்கட் + பாலை மிக்ஸியில் அடிக்கவும்.

அதை முட்டை,சீனியுடன் சேர்க்கவும்.

கேக் செய்ய கூடிய ஒரு வட்ட வடிவ பாத்திரத்தில் கொஞ்சம் சீனியை போட்டு அடுப்பில் குறைந்த தீயில் வைக்கவும்.சீனி உருகி brown கலர் வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்.

இதை ஆற விடவும்.ஆறிய பின்பு இறுகி விடும்.அதனுள் கலக்கி வைத்துள்ள பிஸ்கட் கலவையை ஊற்றவும்.இட்லி சட்டியில் 1/4 பங்கு தண்ணீர் ஊற்றி அதனுள் ஒரு கலவடையை வைத்து அதன் மேல் பிஸ்கட் கலவை சட்டியை வைத்து மூடவும்.20 நிமிடங்கல் வேகவிட்டு எடுக்கவும்.ஆறியவுடன் ஒரு தட்டையில் தலை கீழாய் கவிழ்த்தால் மேலே brown கலரும்,உள்ளே மஞ்சள் கலரும் வரும்

குறிப்புகள்:

சீனி பாகு செய்தவுடன் சட்டியில் எல்லா பக்கமும் பரவும் படி செய்யவும்.வேகும் போது ஆவி நீர் புட்டிங்கில் ஊற்றாமல் இருக்க இட்லி சட்டியின் மூடியை ஒரு துணியால் கட்டிவிடவும்.