பிளாக் பீன்ஸ் சால்சா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிளாக்பீன்ஸ் - ஒரு கேன் 540ml

நறுக்கிய தக்காளி - அரைக் கோப்பை

வெங்காயம் - அரைக் கோப்பை

வேகவைத்த சோளம் - ஒரு கோப்பை

நறுக்கிய குடைமிளகாய் - அரைக் கோப்பை

பூண்டு - ஒரு தேக்கரண்டி

ஜாலப்பீனோ பெப்பர் - ஒன்று

எலுமிச்சைச்சாறு - இரண்டு மேசைக்கரண்டி

மிளகாய்தூள் - அரைத் தேக்கரண்டி

உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி

சீரகத்தூள் - அரை தேக்கரண்டி

நறுக்கிய கொத்தமல்லி - கால் கோப்பை

செய்முறை:

பீன்ஸ்ஸை கேனிலிருந்து உடைத்து ஸ்ரெயினரில் ஊற்றி நன்கு கழுவி வடிகட்டி வைக்கவும்.

ஒரு பீங்கான் கோப்பையில் நறுக்கிய பொருட்கள், சோளம் மற்றும் எல்லாத்தூளையும் போட்டு நன்கு கலக்கவும்.

அதில் பின்பு பீன்ஸ்ஸை சேர்த்து நன்கு கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடவும்.

தேவைப்படும் பொழுது வெளியில் எடுத்து சிப்ஸுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: