பிற்ஸா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரொட்டிக்கு:

----------

ஆட்டா மா/கோதுமை மா - 3/4 கப்

ஓட் மீல் - 1 கைப்பிடி

ஈஸ்ற் - 1/4 தேக்கரண்டி

சீனி - 1/4 தேக்கரண்டி

ஒலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு

மேலே போடுவதற்கு:

------------------

பிற்ஸா ஸோஸ் - 1/2 கப்

பார்மஜான்/மொற்சரில்லா சீஸ் - 1/4 கப்

நீளமாக வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி

நீளமாக வெட்டிய பெல் பெப்பர் - 1 மேசைக்கரண்டி

வட்டமாக வெட்டிய தக்காளித் துண்டுகள் - 5/6

மிளகாய் பிளேக்ஸ் - 1 சிட்டிகை

காய்ந்த பேசில் - 1 சிட்டிகை

காய்ந்த ஒரெகானோ - 1 சிட்டிகை

செய்முறை:

மிதமான சுடு தண்ணீரில் ஈஸ்றைப் போட்டு சீனியையும் சேர்த்து கரைத்து 10 நிமிடங்கள் வைக்கவும்.

மாவினுள் உப்பு, ஒலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.

பின்னர் இதனுள் ஈஸ்ற் கரைசலை சேர்த்து குழைக்கவும்.

இதனுள் ஓட் மீலை சேர்த்து சப்பாத்தி மாவிலும் சிறிது இளக்கமாக குழைக்கவும்.

ஒரு எண்ணெய் பூசிய பாத்திரத்தில் போட்டு மூடி 1 - 2 மணித்தியாலங்கள் மிதமான சூடுள்ள இடத்தில் வைக்கவும்.

வெங்காயம், பெல் பெப்பரை வெறும் சட்டியில் போட்டு மெல்லிய நெருப்பில் வாட்டவும்.

ஒரு அலுமினியம் ஃபாயிலில் அல்லது மேசையில் மாத்தூவி அதன் மேல் மாவுருண்டையை வைத்து கைகளால் அல்லது உருட்டு கட்டையால் 12 - 13 அங்குல சப்பாத்தியாக தேய்த்து பிற்ஸா தட்டில் போட்டு மீண்டும் மூடி 1/2 மணித்தியாலங்கள் வைக்கவும்.

(அவனை 425 Fஇல் முற்சூடு பண்ணவும்.)

பின்னர் அதன் மேல் பிற்ஸா ஸோஸை சீராக பரப்பவும்.

அதன் மேல் வாட்டிய வெங்காயம், தக்காளி, பெல் பெப்பரை தூவவும்.

அதன் மேல் சீஸை (பார்மஜான்/மொற்சரில்லா/இரண்டும்) தூவவும்.

முற்சூடுபண்ணிய அவனில் 15 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகி பொங்கும் வரை வைத்து எடுக்கவும்.

சுவையான பீற்ஸா தயார். மிளகாய் பிளேக்ஸ், பேசில், ஒரெகானோ தூவி சிறிது ஆறவிட்டு துண்டுகளாக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

பீற்ஸாக்கு மேல் போடும் topping இற்கு விரும்பியதை சேர்க்கலாம். காளான், சோயாமீற்(சோயா உருண்டை), ஃபெனல், ஆட்டிசோக், ஸ்பினாச் என சேர்க்கலாம். தண்ணியாக இல்லாது இறுக்கமாக இருக்கும் பழைய கறிகளை கூட வைக்கலாம். :)