பிரொக்கோலி மஞ்சூரியன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரொக்கோலி - 1

வெங்காயம் - 1

குடைமிளகாய் - 1

தக்காளி சாஸ் - 3 tsp

வெங்காயத்தாள் - சிறிது

பச்சை மிளகாய் - 2

காய்ந்த மிளகாய் - 2

சோயாசாஸ் - 1 tsp

பூண்டு - 5 பல்

சர்க்கரை - 1/4 tsp

உப்பு - சுவைக்கு

எண்ணெய் - தேவையான அளவு

மிளகாய்த் தூள் - 1 tsp

மைதா மாவு - 2 tbsp

கார்ன் மாவு - 1tbsp

அரிசி மாவு - 1 tbsp

எலுமிச்சை சாறு - 2 tsp

செய்முறை:

பிரொக்கோலியுடன் மைதா சோள மாவு அரிசி மாவு உப்பு மிளகாய் தூள் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசறி 10 நிமிடன் ஊறவிடவும்.

பிறகு அதை எண்ணையில் பொரித்தெடுக்கவும்.

வெங்காயம் குடைமிளகாயை நீளமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

காய்ந்த மிளகாயை வினிகரில் ஊறவைத்து பச்சைமிளகாயுடன் அரைத்துகொள்ளவும்.

பூண்டு வெங்காய தாளை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

பாதி வெந்ததும் தக்காளி சாஸ் சோயா சாஸ் அரைத்த மிளகாய் விழுது மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

சர்க்கரை சேர்த்து ஒரு கிளறு கிளறி பொரித்தேடுத்ததை சேர்த்து கிளறவும்.

8 நிமிடம் கிளறி அடுப்பை அனைத்து வெங்காய தாள் மற்றும் வெங்காயம் தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: