பிரெஞ்சு டோஸ்ட் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:
ரொட்டி துண்டு - 6
முட்டை - 2
மிளகு தூள் - 1/2 tsp
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
வெள்ளரி - 1
தக்காளி - 1
ஜாம் - 1/2 கப்
வெண்ணை - 1/2 கப்
செய்முறை:
வெள்ளரியையும் தக்காளியையும் வட்டவட்டமாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை உடைத்து ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி மிளகு தூள், ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அடிக்கவும்.
இப்பொழுது இரண்டு ரொட்டி துண்டு எடுத்து ஒரு துண்டில் வெண்ணையும் ஒரு துண்டில் ஜாமும் தடவவும்.
இடையே வெள்ளரியையும் தாக்காளியையும் வைத்து அடுக்கவும்.
இப்பொழுது ஒன்றன்மேல் ஒன்றாக உள்ளே காய்கறிகள் வைத்த சாண்ட்விச்சை முட்டையில் முக்கி வெண்ணை தடவிய தவ்வாவில் சிவக்கும் வரை போட்டு பிராட்டி எடுக்கவும்.
சுவையான பிரெஞ்சு டோஸ்ட் சாண்ட்விச் ரெடி.
குறிப்புகள்:
காய்கறிகளுக்கு பதிலாக வேகவைத்த எலும்பில்லாத சிக்கன் வைத்து கூட செய்யலாம்.