பிரவுன் ரைஸ் சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரவுன் ரைஸ் - இரண்டு கோப்பை

வேகவைத்த சன்னா - ஒரு கோப்பை

வெங்காயம் - இரண்டு

பூண்டு - நான்கு பற்கள்

சிவப்பு நிற குடைமிளகாய் - இரண்டு

உலர்ந்த திராட்சை - அரைக்கோப்பை

சாரப்பருப்பு - அரைக்கோப்பை

நறுக்கிய பேஸில் தழை - ஒரு கோப்பை

ஆலிவ் ஆயில் - முக்கால் கோப்பை

சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி

உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு - இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை:

அரிசியை கொதிக்கும் நீரில் போட்டு உதிரி உதிரியாக வேகவைத்து வடித்து விட்டு நன்கு ஆறவைக்கவும்

வெங்காயம், குடைமிளகாய், பூண்டை பொடியாக நறுக்கவும். மற்றப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.

அரவை இயந்திரத்தில் உலர்ந்த திராட்சையைப் போட்டு எண்ணெயில் பாதியை ஊற்றி, எலுமிச்சைச்சாற்றையும் ஊற்றி ஒரு சிட்டிகை உப்புத்தூள், மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சாரப்பருப்பை போட்டு சிவக்க வறுத்து எடுத்து ஆறியவுடன் நறுக்கி வைக்கவும்.

பிறகு மீதமுள்ள எண்ணெயை ஊற்றி வெங்காயம் பூண்டைப் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று சிவந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விட்டு அதில் சில்லி ஃபிளேக்ஸ், குடைமிளகாய், சாரப்பருப்பு, சன்னா, திராட்சை சாஸ், உப்புத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

பிறகு இந்த கலவையை ஆறவைத்துள்ள ரைஸ்ஸில் போட்டு நன்கு கலக்கி விட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடவும். தேவைப்படும் பொழுது வெளியில் எடுத்து நறுக்கிய பேஸ்ஸில் தழையைத் தூவி விட்டு பரிமாறவும்.

சத்து நிறைந்த சுவையான சாலட் இது.

குறிப்புகள்: