பிட்சா
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - ஒன்று குடை மிளகாய் - கால் கப் ப்ளாக் + க்ரீன் ஆலிவ் காய் - 10 துருவிய சீஸ் - 150 கிராம் டூனா மீன் - ஒரு டின் மாவு தயாரிக்க: மைதா மாவு - 4 கப் பால் - கால் கப் ஈஸ்ட் - 2 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி சாஸ் செய்ய: தக்காளி பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி தக்காளி சாஸ் - அரை கப் சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம்
குடை மிளகாய் மற்றும் ஆலிவ் காயை நறுக்கிக் கொள்ளவும். அரை கப் தண்ணீரில் ஈஸ்ட்டை கலந்து வைக்கவும். சாஸ் செய்ய கொடுத்தவற்றை கலந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு
பால்
சீனி
ஆலிவ் ஆயில்
உப்பு
கரைத்து வைத்துள்ள ஈஸ்ட் சேர்த்து நன்றாக பிசைந்து காற்று புகாமல் மூடி வைக்கவும். 2 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு இரு மடங்காகி இருக்கும்.
மாவினை சற்று பெரிய சப்பாத்தி போல போட்டு
180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 5 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும்.
வேக வைத்த சப்பாத்தியின் மேல் 2 மேசைக்கரண்டி அளவு சாஸ் ஊற்றி
2 மேசைக்கரண்டி டூனா மீன் தூவி
அதன் மேல் வெங்காயம்
குடை மிளகாய்
ஆலிவ் காயை பரவலாக வைக்கவும்.
கடைசியாக சீஸ் தூவி
மீண்டும் அவனில் வைத்து 8 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும்.
சூடான
சுவையான பிட்சா ரெடி.