பிகடா
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த வாழைப்பழ கூழ் - 2 கப்
சீனி(சர்க்கரை) - 2 கப்
பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
கார்ன்ஃப்ளார் - ஒரு மேசைக்கரண்டி
தேசிக்காய்சாறு (எலுமிச்சம்பழசாறு) - 2 பழம்
பிளம்ஸ் - சிறிதளவு
முந்திரிப்பருப்பு(கஜூ) - சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் பட்டரை போட்டு உருக்கவும்.
உருக்கிய பட்டருடன் கார்ன்ஃப்ளாரை போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.
வறுத்தவற்றுடன் வாழைப்பழம், சீனி(சர்க்கரை) ஆகியவற்றை சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும்.
நன்கு கிளறிய பின்பு இதனுடன் தேசிக்காய்சாறு (எலும்பிச்சைபழசாறு) பிழிந்து கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்திற்கு கிளறுங்கள்.
ஒரு தட்டின் எல்லா பக்கங்களுக்கும் நெய் தடவவும். இக்கலவை தயாரானதும் அதை நெய் தடவிய தட்டில் ஊற்றி ஆறவிடவும்.
இக்கலவை ஆறியதும் பிளம்ஸ், முந்திரிப்பருப்பு (கஜூ) தூவி விருப்பம் போல வெட்டி பரிமாறவும்.
குறிப்புகள்:
போர்த்துக்கல் நாட்டு மக்களால் மிகவும் விரும்பி உண்ணப்படும் ஓர் உணவு வகை பிகடா ஆகும் இதில் கார்போஹைட்ரேட், வைட்டமின் (A,C), மினரல், பொட்டாஷியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இதை செய்வது இலகுவானது. அத்துடன் சுவையான ஓர் உணவு வகையே பிகடா ஆகும். எச்சரிக்கை -சர்க்கரை நோயாளர், இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - நன்கு கிளறிய பின்பு இதனுடன் தேசிக்காய்சாறு (எலும்பிச்சை பழசாறு) பிழிந்து கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்திற்கு கிளறுங்கள்.