பாஸ்தா ஸோஸ் II (மற்றும்) அல்பிரெடோ ஸோஸ் I

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டர் - 4 மேசைக்கரண்டி

பால் - 1 கப்

பார்மெஜான் சீஸ் - 3/4 கப்

மைதா மா - 1 மேசைக்கரண்டி

உள்ளி - 2 பற்கள்

பேசில், ஒரெகானோ - 1 தேக்கரண்டி

உப்பு

மிளகுதூள்

செய்முறை:

பாலை சுட வைக்கவும்.

பின்னர் அதனுள் பட்டர், சீசை போட்டு கிளறவும்.

பட்டர், சீஸ் உருகி சிறிது தடித்ததும் மிகுதி பொருட்களைச் சேர்த்து கிளறவும்.

கலவை தடித்ததும் இறக்கவும்.

சுவையான அல்பிரெடோ ஸோஸ் தயார். இதனையும் அனைத்து பாஸ்தாக்களிற்கும் சேர்க்கலாம். ஸ்பகடி போன்ற நீளமான பாஸ்தாக்களிற்கு சேர்க்க மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்புகள்:

பாலிற்கு பதில் ஏவாப்பிரேட்டட் பால் (Evaporated milk), 2% பால், ஃபுல் கிறீம் (full cream)என்பனவும் பாவிக்கலாம். கலோரி கணக்கு பார்த்து சாப்பிடுபவர்கள் 2% பால், Evaporated skim milk பயன்படுத்தலாம்.