பாஸ்தா வொய்ட்சாஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்தா - கால் கிலோ பச்சை மிளகாய் - 2 பூண்டு - 5 பல் வெங்காயம் - 2 சிவப்பு

பச்சை

மஞ்சள் குடை மிளகாய் - தலா ஒரு கப் பேபி கார்ன் - ஒரு கப் சீஸ் - சிறிது மைதா மாவு - ஒரு மேசைக்கரண்டி வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி பால் - ஒரு கப் ஆரிகேனோ

பேஸில் - சிறிது

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பாஸ்தாவை கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்த உடன் குளிர்ந்த நீரில் அலசவும். அப்பொழுது தான் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய்

வெங்காயம் சேர்த்து வதக்கவும். ரொம்பவும் வதக்க வேண்டாம். சுவைக்காக சிறிது வெண்ணெய் சேர்க்கலாம். பிறகு சிவப்பு

பச்சை

மஞ்சள் குடை மிளகாய்

பேபி கார்ன் சேர்த்து சிறிது பிரட்டி விடவும்.

நசுக்கிய பூண்டு

ஓரிகேனோ

பேஸில் மற்றும் உப்பு சேர்க்கவும்.

இன்னொரு பேனில் வெண்ணெயை சூடாக்கி மைதா சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.

வாசம் வரும் பொழுது மைதா மாவுடன் பால் சேர்க்கவும். கட்டி இல்லாமல் வரும்படி கிளறவும்.

இதை வதக்கிய காய்களுடன் சேர்க்கவும்.

சிறிது சீஸ் சேர்த்து 2 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும்.

இத்துடன் வேக வைத்த பாஸ்தா சேர்த்து கிளறி விடவும்.

10 நிமிடம் மூடி போட்டு சிறிய தீயில் வைக்கவும். இதன் ஃப்ளேவர் முழுதாக பாஸ்தாவில் பரவ செய்யும்.

சுவையான பாஸ்தா தயார். இதில் பேபி கார்ன்க்கு பதிலாக ஸ்வீட் கார்ன் சேர்க்கலாம். காய்களை ரொம்ப வதக்காமல் செய்தால் சுவை கூடும்.

குறிப்புகள்: