பாஸ்தா சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஏதாவது பாஸ்தா இரண்டு வகை - தலா 1/2 கப்

வெட்டிய கரட் - 1/2 கப்

வெட்டிய அஸ்பராகஸ் - 1/2 கப்

வெட்டிய பூசணிக்காய் - 1/4 கப்

வெட்டிய தக்காளி - 1/2 கப் (2)

உப்பு

மிளகுதூள்

பார்மஜான் சீஸ் - 2 - 3 மேசைக்கரண்டி

காய்ந்த பேசில் - 1/4 தேக்கரண்டி

காய்ந்த ஒரெகானோ - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

பாஸ்தாவை 4 கப் தண்னீர் விட்டு அவிக்கவும்.

பாஸ்தா அரைவாசி அவிந்ததும் அதனுள் வெட்டிய காய்கறிகளைப்போட்டு மூடி அவிக்கவும்.

காய்கறிகள் அவிந்ததும் சீஸ், உப்பு, மிளகுதூள், பேசில், ஒரெகானோ சேர்த்து கிளறி இறக்கவும்.

சுவையான பாஸ்தா சூப் தயார். சூடாக அருந்தவும்.

குறிப்புகள்:

இதற்கு விருப்பமான மரக்கறிகளைப்போட்டும் செய்யலாம். உள்ளி, வெங்காயமும் சேர்க்கலாம்.