பாஸ்தா கத்தரிக்கய் ஸோஸ் (Pasta with Eggplant Sauce)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெனே பாஸ்தா - 2 கப்

கத்தரிக்காய் - 1 பெரியது

தக்காளி - 2

வெட்டிய உள்ளி - 1/4கப்

வெட்டிய வெங்காயம் - 1/4கப்

ஒலிவ் எண்ணெய் - 6/7 மேசைக்கரண்டி

உப்பு

பார்மஜான் சீஸ் - 1/2 கப்

இத்தாலியன் சீஸனிங் - 1/2 மேசைக்கரண்டி

பேசில் இலை

செய்முறை:

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதனுள் பாஸ்தாவை போட்டு அவிக்கவும்.

பாஸ்தா ஓரளவு அவிந்ததும் அதனுள் 2 மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணெய், உப்பு சேர்த்து கிளறி விடவும்.

பாஸ்தா நன்கு அவிந்ததும் வடித்து எடுத்து வைக்கவும். (வடித்த தண்ணீரில் சிறிதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்)

கத்தரிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

தக்காளியை கிரைண்டரில் போட்டு அடித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மீதி எண்ணெயை விட்டு சூடானதும் கத்தரிக்காய், உள்ளி, வெங்காயம் போட்டு வதக்கவும்.

பின்னர் பாஸ்தா வடித்த தண்ணீர், தக்காளி கூழ், சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கலவை ஓரளவு கொதித்ததும் (தண்ணீர் வற்றியதும்) அடுப்பின் தீயை குறைத்து விடவும்.

பின்னர் அதனுள் அவித்த பாஸ்தா, அரைவாசி சீஸ், இத்தாலியன் சீஸனிங் சேர்த்து கிளறவும்.

பாஸ்தா தயார். பின்னர் இதனை பரிமாறும் தட்டில் கொட்டி மீதி சீஸ், பொடியாக வெட்டிய பேசில் இலை என்பவற்றை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

பெனே பாஸ்தா இல்லாவிட்டால் மக்கரோனி(macaroni) அல்லது போ-ரை (Bow-tie)பாஸ்தாவும் பாவிக்கலாம். உறைப்பு தேவைப்படுபவர்கள் சிறிது சில்லி பேஸ்ட் சேர்க்கலாம். எப்பவுமே Whole Wheat பாஸ்தா பாவிப்பது நல்லது. சத்தானதும் கூட.