பால் அப்பம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்ச அரிசி - 2 கப்

மைதாமா அவித்தது - 2 கப்

மைதாமா அவிக்காதது - 2 கப்

ஈஸ்ட் - சிறிதளவு

தேங்காய் - பாதி மூடி

சீனி - 3-4 மேசைக்கரண்டி

செய்முறை:

அரிசியை 3 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். அதை வடித்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.

மாவை சலித்து எடுத்து மீண்டும் ஒரு முறை அரைக்கவும்.

மாவை சலித்து எடுக்கவும். அதில் வரும் சின்ன குருணலை எடுத்து வைத்துவிட்டு பெரிய குருணலை மீண்டும் அரைக்கவும்.

மீண்டும் சலித்து சின்னக் குருணைலை எடுக்கவும். சின்னக் குருணல் 1/2 கப் இருக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் எடுத்து கொதிக்க வைத்து குருணலைப் போட்டு புக்கை பருவத்தில் காய்ச்சி எடுக்க வேண்டும்.

நன்கு ஆறிய பின்பு அதனுடன் மைதாமா வகை இரண்டையும் ஈஸ்டையும் சேர்த்து குழைத்து 5-6 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.

அப்பம் சுடுவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன்பு தேங்காயை துருவி பாலைப் பிழிந்து 1ம் பாலை ஒரு பாத்திரத்திலும், 2ம், 3ம் பாலை வேறு ஒரு பாத்திரத்திலும் எடுத்து வைக்கவும்.

மாக்கலவைக்கு சிறிதளவு உப்பு சேர்த்து 2, 3ம் பாலை விட்டு அப்பத்திற்கு ஏற்ற பதத்தில் கரைக்க வேண்டும்.

1ம் பாலில் சீனியைப் போட்டு கரைத்து வைக்கவும். அப்பச் சட்டியை அடுப்பில் வைத்து மாவை எடுத்து வார்த்து 1ம் பாலில் ஒரு மேசைக்கரண்டி விட்டு மூடி வேகவிடவும்.

பால் சுண்டியதும் அப்பத்தை எடுக்கவும். அப்படியே முழுவதையும் செய்யவும்.

சுடச் சுட பரிமாறவும்.

குறிப்புகள்: