பாலக் பனீர்
0
தேவையான பொருட்கள்:
பனீர்-250 கிராம்
பாலக் -2 கப்
சீரகம்- 1/4 ஸ்பூன்
இஞ்சி -1 துண்டு(பொடியாய் நறுக்கியது)
பூண்டு-4 பல் (பொடியாய் நறுக்கியது)
வெங்காயம்-2
பச்சை மிளகாய்- -2
தனியாதூள்- 1 ஸ்பூன்
கரம் மசாலா -1/2 ஸ்பூன்
தக்காளி-2
கசூரி மேத்தி-2 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
பால்-1/4 கப்
எண்ணெய்- தாளிக்க
செய்முறை:
முதலில் பாலக்கை நீரில் அரைபதமாக வேகவிட்டு ஆறியதும் அரைத்துக்கொள்ளவும்.
எண்ணெயில் சீரகம்,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
பின் வெங்காயம் பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்
எல்லா வகையான தூள்களையும் தக்காளியும்,கசூரி மேத்தியும் சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.
பின் பாலக் விழுது பனீர் உப்பு சேர்த்து வதக்கவும்
கடைசியில் பாலை விட்டு 5 நிமிடத்தில் இறக்கவும்