பார்பிக்யூ சாஸ்
தேவையான பொருட்கள்:
தக்காளி சாஸ்(tomato puree) - இரண்டு கோப்பை
தண்ணீர் - ஒரு கோப்பை
வெங்காயம் - ஒன்று
பூண்டு - நான்கு பற்கள்
சைடார் வினிகர் - அரைக்கோப்பை
வொர்செஷ்ஷர்(worcestershire) சாஸ் - அரைக்கோப்பை
எண்ணெய் - அரைக்கோப்பை
சர்க்கரை - கால் கோப்பை
மஸ்டர்ட் பவுடர் - இரண்டு தேக்கரண்டி
சில்லி பவுடர் - மூன்று தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், பூண்டைச் சேர்த்து நன்கு நொறுங்க நறுக்கிக் கொள்ளவும்.
அடிகனமான சாஸ்பேனை அடுப்பில் வைத்து தேவையான எல்லாப் பொருட்களையும் போட்டு நன்கு கலக்கவும்.
சாஸ் நன்கு சூடேறியவுடன் அடுப்பின் அனலைக் குறைத்து வைத்து விடவும். அரை மணி நேரம் வரை வைத்திருந்து சாஸ் நன்கு ஒன்றோடு ஒன்று கலந்து பதமானவுடன் இறக்கி விடவும்.
உப்பை பதம் பார்த்து தேவையென்றால் போடவும். இல்லையென்றால் வேண்டாம்.
இந்த சுவையான பார்பிஃயூ சாஸ்ஸை பிடித்தமான இறைச்சியுடன் கலந்து க்ரில் செய்து சாப்பிடலாம்.
அல்லது இதனுடன் தேவையான கெட்சப்பை சேர்த்து அப்பிடைசர்களுக்கு டிப்பிங் சாஸாகவும் பரிமாறலாம்.