பார்பிக்யூ
தேவையான பொருட்கள்:
கோழி துண்டுகள் - 20
இறைச்சி துண்டுகள் - 20
சிகப்பு,பச்சை,மஞ்சள்
குடைமிளகாய் - தலா 1
வெங்காயம் - 1
பார்பிக்யூ குச்சிகள் - 10
மிளகு தூள் - 1 ஸ்பூன்
பூண்டு தூள் - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
கரம்மசாலா - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் ஆயில் - கொஞ்சம்
செய்முறை:
கோழி,இறைச்சிகளை சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.
இறைச்சியில் மிளகு தூள்,பூண்டு தூள்,எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்,கொஞ்சம் ஆலிவ் ஆயில்,உப்பு ,இந்த மசாலாக்களை மட்டும் போட்டு பிரட்டி வைக்கவும்.
கோழியில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,கரம்மசாலா,இஞ்சி பூண்டு,எலுமிச்சை சாறு,உப்பு,ஆலிவ் ஆயில் இவை அனைத்தையும் போட்டு பிரட்டி வைக்கவும்.
குறைந்தது 10 மணி நேரமாவது இவைகள் ஊற வேண்டும்.பார்பிக்யூ குச்சியில் முதலில் 1 துண்டு மஞ்சள் குடை மிளகாய்,பிறகு 1 துண்டு இறைச்சி,பிறகு 1 சிகப்பு குடை மிளகாய்,பிறகு 1 துண்டு இறைச்சி,பிறகு 1 பச்சை குடைமிளகாய்,பிறகு 1 இறைச்சி கடைசியாக 1 துண்டு வெங்காயம் இந்த முறையில் எல்லா இறைச்சிகளையும் கோர்க்கவும்.
கோர்த்த குச்சிகளை அவனில் வரிசையாக அடுக்கி வைக்கவும்.
இதை 200° சூட்டில் வேக விடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும்.
இப்படியே கோழிகள் அனைத்தையும் குச்சியில் கோர்த்து வேக விடுங்கள் மயோனைசுடன் சாப்பிட நன்றாக இரூக்கும்.
சூடான பார்பிக்யூ ரெடி