பாய்லா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 படி(குண்டு அரிசி)

கோழி இறக்கை பகுதி - 1 கிலோ (chicken wings)

பெரிய இறால் - 1/2 கிலோ

பீஃப் - 1/4 கிலோ (beef)(optional)

மட்டி - 200 கிராம்

குடை மிளகாய் (மஞ்சள்,சிகப்பு,பச்சை கலர்) - 1 வீதம்

பல்லாரி வெங்காயம் - 2

மிளகாய் தூள் - 1 தே.க

chicken cubes - 6

மஞ்சள் தூள் - 1/2 தே.க

மிளகு தூள் - 3 தே.க

எண்ணெய் - தே.அளவு

உப்பு - தே.அளவு

செய்முறை:

முதலில் கோழி இறக்கைகளை சுத்தம் செய்து ,மேலே கத்தியால் கீரல் விட்டு ,சிக்கன் க்யூப் மூன்றை எடுத்து நொருக்கி கோழியின் மீது தடவி அப்படியே 1/2 மணி நேரம் வைத்து விடவும்.

பிறகு மட்டியை சுத்தம் செய்து மட்டி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

மட்டி திறந்து கொள்ளும்.அதில் உள்ள சதை பகுதியை எடுத்து தனியே வைக்கவும்.

பீஃபில் உப்பு,மிளகு தூள் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

இறாலை தோல் உரித்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி கோழியை பொரித்து எடுக்கவும்.

அந்த எண்ணெயில் மட்டியையும்,இறாலையும் பொரித்து எடுக்கவும்.

பிறகு ஒரு பெரிய சட்டியில் கோழி பொரித்த எண்ணெய்யை ஊற்றி வெங்காயம்,குடை மிளகாய் போட்டு வதக்கவும்.

கொஞ்சம் வதங்கியவுடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள் போடவும்.

அதனுடன் 3 சிக்கன் க்யூபை போடவும்.

அதில் பீஃபை போட்டு வதக்கவும்.பிறகு அதில் 2 படி தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதிக்கும் போது அரிசியை கழுவி போடவும்.அவ்வப்போது கிண்டிக்கொண்டே இருக்கவும்.

சாதம் 3/4 பதம் வெந்ததும் பொரித்து வைத்துள்ள கோழி,இறால்,மட்டி இவைகளை போட்டு சாதத்துடன் சேர்த்து கிளரவும்.

இப்போது அடுப்பை மெதுவாக வைக்கவும்.

சாதம் தண்ணீர் இல்லாமல் சரியான பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.இப்போது சுவையான பாய்லா தயார்.

குறிப்புகள்:

குழையாத புழுங்கல் அரிசியை பயன்படுத்தவும்.சாதம் உதிரி,உதிரியாக இருக்க வேண்டும்.ckicken cubes பயன் படுத்துவதால் உப்பை பார்த்து போடவும்.