பாயில்ட் ஸ்பைஸி கார்ன்
தேவையான பொருட்கள்:
ப்ரோசன் சோளம் (அ) ப்ரெஷ் - இரண்டு கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
சில்லி பவுடர் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
லெமென் ஜூஸ் - இரண்டு டீ ஸ்பூன்
சோயா சாஸ் - ஒரு டிராப்
பட்டர் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை:
கார்னை முதலில் சிறிது உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.
வெந்த கார்னை வடித்து அதில் உப்பு, சில்லி பொடி, மிளகு தூள், சோயாசாஸ், பட்டர், (பட்டரை ரூம் டெம்ரேச்சரில் மெல்டாக்கி கொள்ள வேண்டும்.)எல்லாவற்றையும் போட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்து சாப்பிடவும்.
குறிப்புகள்:
இது தான் இங்கு துபாயில் ரொம்ப பேமஸ் எந்த ஷாப்பிங்க் மால் போனாலும் குழந்தைகளுக்கு மூக்கை துளைத்து கொண்டிருக்கும் பண்டம். முதல் எல்லாம் பாஃப் கார்ன் இப்போது இது. இது துபாய் என்றில்லை எல்லா நாடுகளிலும் ரொம்ப பேமஸ்.
இந்த மாசாலா தான் என்றில்லை சாட் மசாலா போடலாம். நூடுல்ஸ் பாக்கெட்டில் வரும் மசாலா கூட சேர்க்கலாம். எல்லோரும் விரும்பி சாப்பிடுவது. வேகவைத்து செய்வதால் உடம்பிற்கும் நல்லது அவரவர் விருப்பம் மசாலா, மிளகாய் தூள், மிளகு தூள் கூட போட்டு கொள்ளுங்கள்