பான் போகிபா (1)
0
தேவையான பொருட்கள்:
ப்ரெட் துண்டுகள் - 5 கண்டன்ஸ்டு மில்க் - 150 மில்லி முட்டை - ஒன்று சர்க்கரை - 2 மேசைக்கரண்டி வெனிலா எசன்ஸ் - சில துளிகள் பொடித்த நட்ஸ் - தேவைக்கு வெண்ணெய் - சிறிது
செய்முறை:
ப்ரெட் துண்டுகளை ஒன்று இரண்டாக நறுக்கி போடவும். முட்டையை நன்றாக அடித்து வைக்கவும். அவனை 200 Cல் முற்சூடு செய்யவும்.
ப்ரெட் துண்டுகளோடு கண்டன்ஸ்டு மில்க்
சர்க்கரை மற்றும் தேவையான நீர் விட்டு பிசையவும். (பொங்கல் பதம்)
இத்துடன் அடித்த முட்டை மற்றும் எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
பேக் செய்ய போகும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி நட்ஸ் தூவி தயார் செய்யவும்.
முட்டை கலவையை நன்றாக கலந்து இந்த ட்ரேவில் ஊற்றி அவனில் 30 - 40 நிமிடம் பேக் செய்யவும்.
சுவையான பான் போகிபா தயார்.