பான்புகியோ போந்திபாய்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பான்புகியோ (Bread Fruit) - 1 1/2 கப் சர்க்கரை - ஒரு கப் ஏலக்காய்

பட்டை - சிறிது தேங்காய் பால் - அரை கப்

செய்முறை:

காயை நன்றாக தோல் நீக்கி

தண்டு பகுதி நீக்கி மிக சிறிதாக நறுக்கி நீரில் போடவும். பாத்திரத்தில் நிறைய நீர் விட்டு காயை போட்டு வேக விடவும்.

காய் நன்றாக வெந்து கண்ணாடி போல் வந்ததும் நீரை முழுவதும் வடிகட்டி காயை மீண்டும் பாத்திரத்தில் போடவும்.

இதில் சர்க்கரை சேர்த்து சிறுந்தீயில் அடுப்பில் வைத்து கிளறவும்.

சர்க்கரை சற்று கலக்க ஆரம்பித்ததும் ஏலக்காய்

பட்டை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

சர்க்கரை நன்றாக காயுடன் கலந்து கெட்டியாகும் போது தேங்காய் பால் சேர்க்கவும். சிறுந்தீயில் வைத்து 2 நிமிடம் கிளறி எடுக்கவும்.

மேலே ஒரு தேக்கரண்டி தேங்காய் பால் ஊற்றி சூடாக பரிமாறவும். மாலத்தீவுக்கு அடிக்கடி போய் வரும் திருமதி. வனிதா செய்து காட்டியது.

குறிப்புகள்: