பான்புகியோ பஜ்ஜி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. ரெடிமேட் பஜ்ஜி மாவு - 1 கப்

2. கார்ன் மாவு - 1 மேஜைக்கரண்டி

3. உப்பு - தேவைக்கு

4. எண்ணெய் - தேவைக்கு

5. பான்புகியோ (Bread Fruit) - 10 துண்டுகள்

6. சோடா - தேவைக்கு

செய்முறை:

பான்புகியோவை மெல்லிய துண்டுகளாக நறுக்கி எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய விடவும்.

ரெடிமேட் பஜ்ஜி மாவுடன் கார்ன் மாவும் கலந்து சிறிது உப்பு சேர்த்து (பஜ்ஜி மாவில் உள்ள உப்பை கணக்கில் எடுக்கவும்) இதை சோடா ஊற்றி கலக்கவும்.

இதில் பான்புகியோவை பிரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான பான்புகியோ பஜ்ஜி தயார்.

குறிப்புகள்:

ரெடிமேட் மாவில் உள்ள உப்பு காரமே போதுமானது. கூடுதலாக கார்ன் மாவு சேர்ப்பதால் விரும்பினால் உப்பு, காரம் சிறிது சேர்க்கலாம். இது மிகவும் மொறு மொறுப்பாக சுவையாக இருக்கும்.