பாதாம் அல்வா
தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு - 100 கிராம்
சீனி(சர்க்கரை) - 200 கிராம்
நெய் - 100 மில்லி லிட்டர்
பால் - 200 மில்லி லிட்டர்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பாதாம் பருப்பை தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.
ஊறிய பருப்பின் தண்ணீரை வடித்துவிட்டு பருப்பின் தோலை நீக்கவும்.
தோல் நீக்கிய பருப்பினை பால் விட்டு நன்றாக அரைக்கவும். அடுப்பில் தாட்சியை வைத்து அது சூடாகியதும் அதில் சீனி, தண்ணீர் கலந்து பாகு காய்ச்சவும்.
காய்ச்சிய பாகுடன் அரைத்த பாதாம் கலவையை கலக்கவும். கலக்கியவற்றை நன்றாக (கட்டிபாடாமல்) கிளறவும்.
இக்கலவை ஒட்டும் பதத்தை அடைந்ததும் இக்கலவையில் நெய்யை சிறிதுசிறிதாக விட்டு கிளறவும்.
கிளறிய பின்பு இக்கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் போது அப்பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஒரு தட்டில் எல்லா பக்கமும் கொஞ்சம் நெய் தடவி அதன் மேல் பாதாம் கலவையை போட்டு நன்றாக பரப்பவும் (ஓரளவு உயரமாகவும் மட்டமாக தட்டவும்).
பரப்பிய பாதாம் அல்வாவை வில்லைகளாக வெட்டவும். ஆறியதும் வெட்டிய வில்லைகளை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
பாதாம் அல்வா சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சுவை கூடிய அல்வா ஆகும் அத்துடன் இந்த பாதாம் அல்வாவில் கார்போஹைட்ரேட், மினரல், வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் நிறைந்து உள்ளது.
எச்சரிக்கை - சர்க்கரை நேயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் -ஊறிய பருப்பின் தண்ணீரை வடித்துவிட்டு பருப்பின் தோலை நீக்கவும், தோல் நீக்கிய பருப்பினை பால் விட்டு நன்றாக அரைக்கவும். மாற்று முறை - தண்ணீருக்கு பதிலாக பாலில் பாதாம் பருப்பை ஊற விடலாம்.