பாண் (பிரெட்)
தேவையான பொருட்கள்:
மா (All-Purpose Flour) - 3 கப்
ஈஸ்ட் - 3 1/4 தேக்கரண்டி
உப்பு
சீனி - 1 தேக்கரண்டி
செய்முறை:
மாவை அரித்து வைக்கவும்.
மிதமான சுடுதண்ணீ ரில் சீனியை கரைத்து அதனுள் ஈஸ்ட்டைப் போட்டு 5- 8 நிமிடங்கள் விடவும். ஈஸ்ட் நுரைத்து நன்கு பொங்கி வரும்.
பின்னர் மாவினுள் ஈஸ்ட் கரைசல் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவிற்கு போல சிறிது இளக்கமக நன்கு பிசையவும். ( 10 நிமிடங்கள்)
பின்னர் பிசைந்த மாவை பாண்(பிரெட்) அச்சினுள் போட்டு பரவி விட்டு 1 - 11/2 மணித்தியாலங்கள் மிதமான சூடுள்ள இடத்தில் வைக்கவும். பிரெட் அச்சு இல்லாவிட்டல் சிறிய உருண்டைகளாக்கி கப் கேக் அச்சினுள்ளும் வைக்கலாம்.
அவனை 400 F இல் முற்சூடு செய்யவும்.
அச்சில் வைத்த மா இப்பொழுது நன்கு பொங்கி இருக்கும். இதனை முற்சூடு செய்த அவனில் 20 - 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
சூடான சுவையான பாண்(பிரெட்) தயார். இதனை சம்பல், குழம்புடன் அல்லது பட்டர், ஜாமுடன் சாப்பிடலாம்.