பாண் ப்ரெட்
தேவையான பொருட்கள்:
மா (All-Purpose Flour) - 3 கப் ஈஸ்ட் - 3 1/4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சீனி - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
மாவை சலித்து சுத்தம் செய்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மிதமான சூடுள்ள தண்ணீரில் சீனியை போட்டு கரைத்துக் கொண்டு அதனுடன் ஈஸ்டை போட்டு 5 - 8 நிமிடங்கள் வைத்திருக்கவும். ஈஸ்ட் நுரைத்து பொங்கி வரும்.
மற்றொரு பாத்திரத்தில் சலித்த மாவை போட்டு ஈஸ்ட் கரைசல் மற்றும் உப்பு சேர்த்து
தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு 10 நிமிடங்கள் பிசையவும்.
பின்னர் பிசைந்த மாவை பாண் அச்சியில் பரவினாற் போல் வைத்து 1 - 1 1/2 மணி நேரங்கள் மிதமான சூடுள்ள இடத்தில் வைத்திருக்கவும்.
ப்ரெட் அச்சு இல்லாவிட்டால் சிறிய உருண்டைகளாக செய்து கேக் அச்சியினுள் வைக்கவும்.
அவனை 400 Fல் முற்சூடு செய்து வைக்கவும். அச்சியில் வைத்திருக்கும் மாவு நன்கு பொங்கி வந்திருக்கும்
அதை முற்சூடு செய்த அவனில் வைத்து 20 - 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
சூடான சுவையான பாண் ப்ரெட் தயார். இதனை சம்பல்
குழம்புடன் அல்லது பட்டர்
ஜாமுடன் சாப்பிடலாம். இலங்கைத் தமிழரான திருமதி. நர்மதா அவர்கள் செய்து காட்டியுள்ள குறிப்பு இது. இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி
மெக்ஸிகன்
இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.