பாண் பால்கோவா
0
தேவையான பொருட்கள்:
பாண் - 8 துண்டுகள்
ஏலக்காய் - 2
ரின்பால்(கன்டென்ஸ்ட் பால்) - அரைகப்
சீனி (சர்க்கரை) - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
பாண் ஒரங்களை வெட்டி நீக்கி விட்டு கிரைண்டரில் (மிக்ஸியில்) ஏலக்காயுடன் சேர்த்து அரைத்து ரின்பாலில் (கன்டென்ஸ்ட் பால்) கலந்து சீனி (சர்க்கரை) தூவி விடவும். இதோ பாண் பால்கோவா தயார்.
குறிப்புகள்:
5 நிமிடத்தில் விருந்தினரை அசத்தும் இனிப்பு. சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனை கேட்டு இதை உண்ணவும்.