பாண்டன் கூழ்
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 2 கப் பாண்டன் இலை - 5 இலைகள் சீனி - ஒன்றரை கப் நெய் (அ) வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் - ஒரு தேக்கரண்டி சோம்பு - கால் தேக்கரண்டி தண்ணீர் - ஒன்றரை கப் திக்கான தேங்காய் பால் - 500 மில்லி பசும்பால் - 2 கப் உப்பு - கால் தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி
சோம்பு மற்றும் பாண்டன் இலைகளைப் போட்டு மூடி வைத்து கொதிக்கவிடவும்.
மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் வெண்ணெய்
உப்பு
ஒரு மேசைக்கரண்டி சீனி
அரை கப் தேங்காய் பால் ஊற்றி பிசைந்து
அதனுடன் சிறிது சிறிதாக தேவைக்கேற்ப பசும்பாலை ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவில் ஒரு பெரிய உருண்டை அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு மீதமுள்ள தேங்காய் பால் மற்றும் பசும்பாலை ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
மீதம் உள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
கொதிக்க வைத்த பாண்டன் இலைத் தண்ணீரை வடிகட்டி மீண்டும் கொதிக்க வைக்கவும். கொதித்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு
வாசனைக்காக மூன்று பாண்டன் இலைகளைப் போட்டு மூடிவைத்து வேகவிடவும்.
வெந்ததும் சீனியைப் போட்டு
கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி
சிறு தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடிபிடிக்காமல் கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான பாண்டன் கூழ் தயார்.