பாட் பிங்க் சூ
0
தேவையான பொருட்கள்:
துருவிய ஐஸ் (shredded ice/ice shaving) - 1 கப்
கிவி பழம் (சிறிய துண்டுகளாக நறுக்கியது) - 5-7
வாழைப்பழம் (சிறிய துண்டுகளாக நறுக்கியது) - 5-7
இனிப்பு ரெட் பீன் (வேக வைத்தது) - 1 தேக்கரண்டி
கன்டென்ஸ்டு மில்க் - 1 தேக்கரண்டி
ரைஸ் கேக் [இ(விருப்பமி)ருந்தால்]
சுகர் - 1 ஸ்பூன்
ஐஸ் க்ரீம் அலல்து ஃப்ரெஷ் க்ரீம் - அலங்கரிக்க
செய்முறை:
ரெட் பீன், நறுக்கிய பழத்துண்டுகள், ரைஸ் கேக், கன்டென்ஸ்டு மில்க் மற்றும் ஐஸ் துகள்கள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
பின் கிண்ணதில் வைத்து மேலே ஐஸ்க்ரீம் கொண்டு அலங்கரித்து, பரிமாறவும்.
மிக ப்ரபலமான (கொரியாவில் மட்டுமல்லாது எல்லா நாடுகளிலும் என்று நினைக்கிறேன்), எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் கோடை ஸ்பெஷல் இது.
குறிப்புகள்:
பாட் - பீன் என்று அர்த்தம் கொரிய மொழியில்.