பாட்ரிக்ஸ் டே பை
தேவையான பொருட்கள்:
ரெடிமேட் பஃப் பேஸ்ட்ரி ஷீட்ஸ் - 2 மொட்ஸரெல்லா சீஸ் - 3/4 கப் முட்டை - 2 ஃப்ரோஸன் பச்சைப் பட்டாணி - 2 கப் மேசை உப்பு - 1/2 தேக்கரண்டி + 1 பின்ச் கார்லிக் சால்ட் (garlic salt) - சிறிது பச்சை மிளகாய் (நறுக்கியது) - ஒரு தேக்கரண்டி ரோஸ்மெரி - ஒரு நெட்டு பச்சை ஃபுட் கலர்
செய்முறை:
முற்சூடு செய்வதற்காக அவனை 200°c ல் போட்டு வைக்கவும். தேவையானவைகளை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
2 கோப்பை பட்டாணியை குளிர் இறங்கும் வரை மைக்ரோவேவ் செய்து எடுக்கவும். (ஒவ்வொரு இருபது செக்கன்ட்களுக்கு ஒரு தடவை வெளியே எடுத்துக் குலுக்கிவிட்டு வைத்தால் வெப்பம் சீராகப் பரவி இருக்கும்.) குளிர் இறங்கியதும் அரைத் தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கலக்கி மீண்டும் முப்பது செக்கன்ட்கள் மைக்ரோவேவில் வைத்து எடுக்கவும்.
மிளகாயையும் ரோஸ்மெரியையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
இரண்டு முட்டைகளோடு ஒரு தேக்கரண்டி நறுக்கி வைத்த பச்சைமிளகாய்
அரைத் தேக்கரண்டி நறுக்கிய ரோஸ்மெரி
ஒரு பின்ச் உப்பு சேர்த்து அடித்து எடுக்கவும்.
இதனோடு ஒரு துளி பச்சைக்கலர் சேர்த்து அடித்து எடுக்கவும்.
முக்கால் கோப்பை சீஸ் சேர்த்துக் கலந்து சில நிமிடங்கள் ஊற விடவும்.
பட்டாணியை நீர் வடியவிட்டு எடுத்து முட்டை சீஸ் கலவையோடு சேர்த்துக் கலக்கி வைக்கவும். சிறிது கார்லிக் சால்ட் தூவவும்.
மஃபின் ட்ரேயில் எண்ணெய் ஸ்ப்ரே செய்து வைக்கவும். மேசையில் மாவு தூவிக் கொண்டு பேஸ்ட்ரி ஷீட்டைப் போட்டு ட்ரேயில் உள்ள குழிகளை விட சுற்றிலும் அரை சென்டி மீட்டர் பெரிதாக வருமாறு வட்டங்கள் வெட்டி எடுக்கவும். மீதியாக உள்ள பேஸ்ட்ரியை மீண்டும் உருட்டிக் கொண்டு வட்டங்கள் வெட்டிக் கொள்ளவும். குழிகளில் வட்டங்களை வைத்து முள்ளுக்கரண்டியால் குத்திவிடவும். கையால் அழுத்த வேண்டாம்.
ஒவ்வொரு குழியிலும் ஒரு மேசைக்கரண்டி அளவு பட்டாணிக் கலவையை வைக்கவும். முட்டை
சீஸ்
பட்டாணி எல்லாம் கலந்து வருமாறு பார்த்துக் கொள்ளவும். குழியை முழுவதாக நிரப்ப வேண்டியது இல்லை. (பேஸ்ட்ரியும் முட்டையும் பொங்கி வரும் போது பை தன்னால் நிரம்பிவிடும். )
அவன் தயாரானதும் 15 முதல் 20 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.