பாகற்காய் பிரட்டல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 450 கிராம் வெங்காயம் - 20 கிராம் பூண்டு - 2 பற்கள் புளி - 20 கிராம் வெந்தயம் - 2 தேக்கரண்டி கறித்தூள் - 2 தேக்கரண்டி பால் - 15 மி.லி உப்பு - ஒரு தேக்கரண்டி சீனி - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

பாகற்காய் பிரட்டல் செய்ய மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

பாகற்காய்

பூண்டு

வெங்காயம் ஆகியவற்றை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

நறுக்கி வைத்திருக்கும் பாகற்காயை தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்து வாணலியில் போட்டு வெந்தயம்

பூண்டு

வெங்காயம்

உப்பு ஆகியவற்றை அதனுடன் போடவும்.

புளியை நன்கு கரைத்து ஊற்றி பாகற்காய் முழுவதும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.

பாகற்காயில் ஓரளவிற்கு தண்ணீர் வற்றி வெந்ததும் தூளை சேர்த்து வேக விடவும்.

நன்கு வெந்ததும் அதில் கறிவேப்பிலை மற்றும் பாலை சேர்க்கவும். பால் கட்டாயமாக சேர்க்க தேவையில்லை விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.

கறி பிரட்டலாக வந்ததும் சீனியை சேர்த்து பிரட்டி இறக்கி வைக்கவும்.

மருத்துவ தன்மை நிறைந்த பாகற்காய் பிரட்டல் ரெடி. இதனை சோறு

புட்டு

இடியப்பத்தோடு சாப்பிட சுவையாக இருக்கும். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: