பாகற்காய் சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாகற்காய்(வட்டமாகவெட்டிசுத்தப்படுத்தியது)- 250 கிராம்

தயிர் - ஒரு கப்

தேங்காய்ப்பூ - கால் பாதி

புளி - தேவையானளவு

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

மிளகு - கால் தேக்கரண்டி

உப்பு - தேவையானளவு

எண்ணெய் - தேவையானளவு

வெங்காயம் - அரைப்பாதி

கடுகு - (கால்+கால்) அரை தேக்கரண்டி

சீரகம் - கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை - தேவையானளவு (வெட்டிய)

செய்முறை:

கடாயில்(தாச்சியில்)எண்ணெய் விட்டு கொதித்ததும் கடுகு போட்டு அது வெடித்ததும் (பொரிந்ததும்) வெங்காயம் போட வேண்டும் அது ஒரளவு பொரிந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும்.

தாளித்த பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு பின்பு மற்றைய பாத்திரத்தில் மஞ்சள்தூள், புளி(தண்ணீர்)சேர்த்து அதில் பாகற்காய் கலந்து 10 நிமிடம் ஊற வைத்து பொரித்து ஆறவிடவும்

கிரைண்டரில் (அம்மியில்) தயிருடன் தேங்காய், பச்சைமிளகாய், கடுகு இவை மூன்றையும் விழுதாக அரைக்கவும்.

இப்போது பொரித்த (வறுத்த) பாகற்காய், அரைத்த விழுது, தாளித்தவை, வெட்டிய கறிவேப்பிலை, உப்பு இவையாவற்றையும் கலந்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இது சர்க்கரை நோயாளரின் உடலில் உள்ள தேவையற்ற சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதுடன் சிறுவர்களின் உடலில் ஏற்படும் பூச்சி, புழுக்களை கட்டுப்படுத்தும். அத்துடன் இது விஷேசமாக (ஸ்பெஷல் ) புளி இல்லாத குழம்பிற்கு சரியான ஜோடி. சர்க்கரை நோயாளர் பாகற்காய் உணவுகளை அளவுக்கு (தேவைக்கு) மேலதிகமாக உண்டால் இருதய நோய் வர வாய்ப்புள்ளது.