பஸ்பௌசா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சன்னமான ரவை - 2 கப் (உப்பு சேர்க்காத) வெண்ணெய் - அரை கப் சர்க்கரை - 3/4 கப் முட்டை - 2 கெட்டியான தயிர் - 3/4 கப் பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி பிஸ்தா

வால்நட் - கால் கப் சிரப் செய்வதற்கு : சர்க்கரை - 2 கப் ரோஸ் எசன்ஸ் - 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி தண்ணீர் - 1 1/2 கப்

செய்முறை:

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெண்ணெய்

சர்க்கரை மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். நுரை வரும் வரை கலக்கவும். சர்க்கரை பொடியாக இருந்தால் சீக்கிரமே கலந்து விடும். சர்க்கரை பொடித்து சேர்த்தால் இன்னமும் நல்லது. எல்லாம் ஒன்றாக கலந்து இந்த பதத்தில் இருக்கும்.

பிறகு முட்டையை தனியே வேறு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு கலந்து விட்டு இந்த கலவையில் சேர்க்கவும். நன்கு கலந்து விடவும். நுரை பொங்க அடிக்க வேண்டும் என்று அவசியமில்லை.

வேறு ஒரு பாத்திரத்தில் ரவை

பேக்கிங் பவுடர்

சோடா எல்லாவற்றையும் கலந்து விட்டு சலித்து வைக்கவும். ரவை கலவை மற்றும் தயிரை சர்க்கரை கலவையில் சேர்க்கவும். கலவையை நன்கு கலக்கினால் தான் வேகும் போது பொங்கி வரும்.

எல்லாவற்றையும் ஒன்றாக நன்கு கலக்கவும். எல்லாம் கலந்த கலவை இந்த பதத்தில் இருக்கும்.

ஒரு பேக்கிங் ட்ரேவில் சிறிதளவு வெண்ணெயை தடவி அதில் இந்த கலவையை ஊற்றவும். பிஸ்தா மற்றும் வால்நட்டை பொடியாக நறுக்கி மேலே தூவவும். இதை 300 டிகிரி F முற்சூடு செய்யப்பட்ட அவனில் 30-35 நிமிடம் வேக வைக்கவும். ஒரு போர்க் கொண்டு குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும் அதுவே சரியான பதம்.

இதற்கிடையில் வேறு ஒரு பாத்திரத்தில் சிரப் செய்ய கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

5-7 நிமிடம் கொதித்த பின்னர் அதை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி ஊற்றவும். ஒரு பெரிய பாத்திரத்தில் ஐஸ் வாட்டர் பிடித்து அதில் இந்த சிரப் உள்ள பாத்திரத்தை வைக்கவும். மூழ்காமல் பார்த்துக் கொள்ளவும். இப்படி தான் சிரப்பை ஆற வைக்க வேண்டும்.

கேக் வெந்ததும் சூடாக இருக்கும் போதே ஆறிய சிரப்பை அதன் மேல் ஊற்றவும். அப்படியே 15 நிமிடம் விடவும்.

பிறகு துண்டுகளாக்கி மேலே க்ரீம் அல்லது விருப்பமான பழத்துண்டுகளுடன் பரிமாறவும். சுவையான பஸ்பௌசா ரெடி.

குறிப்புகள்: