பஷி ரியா
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 4 வெங்காயம் - ஒன்று ரம்பை இலை - 2 துண்டு கறிவேப்பிலை - சிறிது பட்டை - ஒரு துண்டு ஏலக்காய் - 2 தக்காளி - ஒன்று மஞ்சள் தூள் - சிறிது கறி தூள் - ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி சர்க்கரை - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - தேவைக்கு உப்பு
செய்முறை:
கத்தரிக்காய்களை சிறு துண்டுகளாக்கி லேசாக உப்பு சேர்த்து பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை
ஏலக்காய்
கறிவேப்பிலை
ரம்பை இலை
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.
சிறிது நீர் விட்டு மசாலா வாசம் போகும் வரை கொதிக்கவிட்டு
பொரித்து வைத்துள்ள கத்தரிக்காய்களை சேர்க்கவும்.
சிறிது நேரம் பிரட்டி மசாலா நன்றாக சேர்ந்து வந்ததும் இறக்கவும். சுவையான பஷி ரியா தயார்.