பழ லசான்யா (Lasagna)
தேவையான பொருட்கள்:
பிரெட் - 1 lb
அப்பிள் - 2
பேச் - 2
பிளம் - 2
எலுமிச்சை - 1
பிரெட் தூள் - 2 கப்
பிரவுண் சீனி - 3/4 கப் (0.75 கப்)
பட்டர் - சிறிது
கறுவா தூள் - 1/4 தேக்கரண்டி
பொடித்த பாதாம் - 3 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
ஐசிங் சீனி - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
அவனை 350 F இற்கு சூடாக்கவும்.
ஒரு பானில்(Pan) பட்டரை உருக்கி அதில் பிரெட் துண்டுகளை இரு பக்கமும் திருப்பி போட்டு டோஸ்ட் செய்யவும்.
எலுமிச்சையின் தோலை ஒரு துருவி மூலம் துருவி 1 மேசைக்கரண்டி அளவு எடுக்கவும்.
பின்னர் எலுமிச்சை சாறு பிழிந்து வைக்கவும்.
அப்பிள், பேச், பிளம் மூன்றையும் சிறு துண்டுகளாக வெட்டி, அரை வாசி பிரெட் தூள், 1/2 கப் சீனி, எலுமிச்சை சாறு மற்றும் தோலுடன் கலந்து வைக்கவும்.
மீதி பிரெட் தூள், 1/4 கப் சீனி, கறுவாதூள், உப்பு என்பவற்றை கலந்து தனியாக வைக்கவும்.
ஒரு பட்டர் தடவிய பேக்கிங் தட்டில் பிரெட் துண்டுகளை நெருக்கமாக அடுக்கி அதன் மேல் கலந்து வைத்த பழக் கலவையில் அரைவாசியை பரப்பவும்.
அதன் மேல் மீண்டும், ஒரு படையாக பிரெட்டை அடுக்கி மீதி பழக்கலவையை பரப்பவும்.
அதன் மேல் கலந்து வைத்த பிரெட் தூள் கவையை பரப்பி கைகளால் லேசாக அழுத்தி விடவும்.
அதன் மேல் பொடித்த் பாதாமை தூவி சூடாக்கிய அவனில் வைத்து 30 - 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.
சுவையான பழ லசான்யா தயார். ஆறியதும் இதன் மேலே ஐஸிங் சீனி தூவி துண்டுகளாக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இதற்கு மாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்களும் (tropical friuts) பயன்படுத்தலாம். பிரவுண் பிரெட்டும் பாவிக்கலாம். சத்தானது. குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களின் போது ஐஸிங் சீனிக்கு பதிலாக விப் கிறீம் (Whipped-cream) அல்லது கேக் ஐஸிங் கொண்டும் அலங்கரிக்கலாம்.