பல்கர் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பல்கர் வீட்(burgul/bulgur - 1.5 கப்
சிக்கன் கீமா - 200 கிராம்
எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி&பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
தக்காளி - 1
மல்லி & புதினா நறுக்கியது - 1 கைப்பிடி
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1.5 ஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
செய்முறை:
முதலில் குக்கரில் எண்ணை காயவைத்து வெங்க்யானம் பச்சை மிளகாயை பொந்நிறமாக வறுத்து பின் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாடை நீங்க வதக்கவும்
பின்பு தக்காளி,மல்லி மற்றும் புதினா சேர்த்து குழைய வதக்கவும்
பின்பு அதில் கரம் மசாலா தூள்,உப்பு,மஞ்சள் தூள் மற்றும் சிக்கன் கீமா சேர்க்கவும்
நன்கு வதக்கியபின் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
பின்பு பல்கர் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கவும்
குறிப்புகள்:
இது எளிமையாக குக்கரில் சமைத்தாலும் ஒன்றோடொன்று ஒட்டாது பொலபொலவென்று வரும்.இதே முறையில் மட்டன் கீமா கொண்டோ காய்கறி கொண்டோ வெஜிடேரியனாகவும் செய்யலாம்.சத்தான ஆகாரமும் கூட