பலாப்பழ ஜூஸ்
0
தேவையான பொருட்கள்:
பலாப்பழம் - 20 சுளைகள்
பால் - 2 கப்
தண்ணீர் - ஒரு கப்
சீனி - 12 தேக்கரண்டி
வெனிலா - அரை தேக்கரண்டி
மஞ்சள் கலரிங் (ஐஸிங் கலர்) - அரை/கால் தேக்கரண்டி
ஐஸ்கட்டி - 10 துண்டுகள்
செய்முறை:
கிரைண்டரில் பலாப்பழசுளைகள், பால், தண்ணீர், சீனி, வெனிலா, மஞ்சள்கலரிங் போட்டு நன்றாக அடித்து கொள்ளவும். அதன் பின்பு ஜுஸை வடிகட்டி ஐஸ்கட்டி கலந்து பரிமாறவும்.
குறிப்புகள்:
மிக மிக சுவையானது உடனடி புத்துணர்ச்சிக்கு எளிய ஜூஸ். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - கிரைண்டரில் முற்றிய பழாப்பழசுளைகள், பால், தண்ணீர், சீனி, வனிலா, மஞ்சள் கலரிங் போட்டு நன்றாக அடித்து கொள்ளவும். எச்சரிக்கை- சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி குடிக்கவும்.