பலாக்கொட்டை வறுவல்
0
தேவையான பொருட்கள்:
பலாக்கொட்டை - கால் கிலோ கறிவேப்பிலை - சிறிதளவு மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு (வறுக்க)
செய்முறை:
பலாக்கொட்டையை சுத்தம் செய்து நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய பலாக்கொட்டையுடன் தூள் வகைகள்
உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலைச் சேர்த்து பிசைந்து வைக்கவும். (விரும்பினால் ஒரு தேக்கரண்டி அளவு கார்ன் ஃப்ளார் சேர்க்கலாம்).
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பலாக்கொட்டைகளை சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
மாலை நேரத்தில் கொறிப்பதற்கு சுவையான மொறு மொறுப்பான பலாக்கொட்டை வறுவல் தயார். சாதத்துடன் பக்க உணவாக சாப்பிடவும் நன்றாக இருக்கும்.