பர்மிஸ் கோகனட் ரைஸ் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்

தேங்காய் - ஒன்றில் துருவி எடுத்த பால் 4 கப்

வெங்காயம் - 2

பச்சைமிளகாய் - 3

கிராம்பு - 3

ஏலக்காய் - 2

பிரியாணி இலை - ஒன்று

பட்டை - ஒன்று

பூண்டு - 3

புதினா - கொஞ்சம்

சோம்பு - ஒரு தேக்கரண்டி

இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி

நெய் - 5 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

முந்திரி - 5

செய்முறை:

குக்கரில் எண்ணெய், நெய்யும் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கிராம்பு, இலை, பட்டை, சோம்பு, இஞ்சி விழுது, பூண்டையும் போட்டு வதக்கவும்.

புதினாவும், களைந்த அரிசியும் போட்டு கொஞ்சம் வதக்க வேண்டும்.

2 கப் அரிசிக்கு 4 கப் தேங்காய் பால், உப்பும் போட்டு ஒரு விசில் வந்த பிறகு அடுப்பை ஆப் செய்ய வேண்டும்.

ஆறின பிறகு நெய்யில் முந்திரி வறுத்து போடவும், மேலே கொத்தமல்லி இலை போட்டு அலங்கரிக்கவும்.

ரொம்ப டேஸ்டியாக இருக்கும்.

குறிப்புகள்:

இது தேங்காய் பாலில் செய்வதால் ரிச்சாக இருக்கும் பர்மிஸ் விரும்பி சாப்பிடக்கூடியது.

பாஸ்மதி அரிசியிலும், சாதா அரிசியிலும் செய்யலாம். பாஸ்மதி அரிசி ஒரு விசில், சாதா அரிசி 3 விசில்.