பரோட்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதாமா (கோதுமைமா) - 500 கிராம்

உப்பு - தேவையானளவு

பால் - (1-2) மேசைக்கரண்டி

பட்டர் - 3 மேசைக்கரண்டி

முட்டை - ஒன்று (விரும்பினால்)

கொதிநீர் - தேவையானளவு

செய்முறை:

மைதாமா (கோதுமைமா), உப்பு, பால், (ஒரு மேசைக்கரண்டி) பட்டர், முட்டை ஆகியவற்றை போட்டு கலக்கவும்.

கொதிநீர் விட்டு நன்றாக குழைக்கவும். குழைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும்.

சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து வட்டமாக தட்டவும். அதன் பின்பு வட்டமாக தட்டிய மாவில் (சாரிக்கு பிளிட்ஸ் பிடிப்பது போல,(கொசுவம் பிடிப்பது போல) பிளிட்ஸ் பிடிக்கவும் (பட்டரை பிளிட்ஸ்சின் இரு பக்கமும் தடவி).

அந்த மாவை பிளிட்ஸ்சுடன் நீளமாக பிடிக்கவும் (நாடாவைப்போல). அந்த நீளமான மாவை வட்டமாக சுற்றி ஓரளவு மெல்லிய வட்டமாக தட்டவும்.

அடுப்பில் தவா (தோசைக்கல்) வைத்து அது சூடானதும் வட்டமாக தட்டிய மாவினை போட்டு வேகவிடவும்.

அது வெந்ததும் அதனை மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும்.

இருபக்கமும் வெந்ததும் சுவையான, மென்மையான(soft) பரோட்டா தயாராகிவிடும் .

இதனைப்போல மற்றைய பரோட்டாகளையும் தயார் செய்து பரிமாறவும் .

குறிப்புகள்:

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணுக்கூடியதும் சுவைவையானதும். கார்போஹைட்ரேட், கால்சியம், மினரல், உயிர்சத்துகள் நிறைந்ததும் ஆன ஓரு உணவு. எச்சரிக்கை - இருதய, சர்க்கரை நோயாளிகள் வைத்தியரின் ஆலோசனைப்படி சாப்பிடவும். மாற்று முறை - (கொழுப்பு) (fat)பட்டருக்கு பதிலாக கொழுப்பு குறைந்த பட்டரோ அல்லது எண்ணெய் பாவிக்கலாம். கவனிக்க வேண்டிய விசயங்கள்-(1)வட்டமாக தட்டிய மாவில் (சாரிக்கு பிளிட்ஸ் பிடிப்பது போல) பிளிட்ஸ் பிடிக்கவும் (பட்டரை பிளிட்ஸ்சின் இரு பக்கமும் தடவி).(2) பரோட்டா நன்றாக வெந்துவிட்டதா என்பதை கவனிக்கவும் .